உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்ரீதர் (இயக்குநர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
SelvasivagurunathanmBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:07, 12 மே 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎மேற்கோள்கள்: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
சி. வி. ஶ்ரீதர்
இந்திய அஞ்சல் தலையில் சி. வி. ஶ்ரீதர்
பிறப்புசித்தாமூர் விசயராகவுலு ஶ்ரீதரகிருஷ்ணன் & (ஶ்ரீதர்)
(1933-07-22)22 சூலை 1933
சித்தாமூர், செங்கல்பட்டு, மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா இந்தியா
இறப்பு20 அக்டோபர் 2008(2008-10-20) (அகவை 75)
சென்னை, தமிழ்நாடு
பணி
செயற்பாட்டுக்
காலம்
1959–1991
பெற்றோர்தந்தை : விஜயராகவுலு ரெட்டியார்
தாயாா் : தாயாரம்மாள்
வாழ்க்கைத்
துணை
தேவசேனா

சி. வி. ஶ்ரீதர்(C. V. Sridhar, சூலை 22, 1933 – அக்டோபர் 20, 2008) புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர்.

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

ஶ்ரீதரகிருஷ்ணன் என்ற இயற்பெயருடன் பிறந்த ஶ்ரீதர், விஜயராகவுலு ரெட்டியார் - தாயாரம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவர் அப்போதைய செங்கல்பட்டு செஞ் யோசப் பள்ளியில் 10ஆம் வகுப்பு வரை படித்தார். தனது 20-வது வயதிலே தமிழ் உரைநடைகளை எதுகை மோனையுடன் எழுதித் தேர்ச்சி பெற்றார். பள்ளிப் பருவத்தில் அங்கு நடத்தப்படும் கலை நிகழ்ச்சி நாடகப் போட்டிகளில் தமிழ் வசனத்தை மையமாக வைத்து இவர் பல கதைகளை எழுதியுள்ளார். அதே போல் அந்த சிறு வயதிலே அவர் ஒரு அழகிய கதையுடன் சென்னையில் உள்ள ஏ. வி. எம் நிறுவனத்தில் இயக்குனர் ப. நீலகண்டன் அவர்களிடம் அந்த கதையை காட்டிய போது அதை படித்து பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது ஆனால் நீ இன்னும் பெரிய ஆளாக வளர்ந்த பிறகு இதை படமாக்கலாம் என்று கூறிவிட்டார். ஆனால் அந்த நேரத்தில் மனம் தளராத ஶ்ரீதர் அடுத்ததாக டி.கே.டி சகோதர்கள் சொந்தமாக நடத்தி வந்த நாடக சபாவில் உள்ள தி. க. சண்முகத்திடம் காட்டிய போது அது விரைவில் நாடகம் ஆக நடத்தபட்டு அதைத் திரைப்படம் ஆக எடுக்க நினைத்த சண்முகம் அந்தக் கதையில் சில திருத்தங்களை செய்யச் சொன்னார். பின்பு அந்த கதை நாடகமாக நடத்தப்பட்டு திரைப்படமாக 1954 இல் ரத்த பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார் ஸ்ரீதர்.

அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த திரைப்பட வசனகர்த்தாவான இளங்கோவன் வசனத்தால் ஈர்க்கப்பட்டு அவருடன் இணைந்து 1963 ஆம் ஆண்டு சித்தூர் ராணி பத்மினி என்ற திரைப்படத்தில் கதை-வசனம் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார். ஶ்ரீதர் தனது தொடக்ககாலத்தில் எதிர்பாராதது, மாமன் மகள், அமரதீபம், மாதர் குல மாணிக்கம், யார் பையன், எங்கள் வீட்டு மகாலட்சுமி, உத்தம புத்திரன், மஞ்சள் மகிமை போன்ற பல திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார்.

ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினிகணேசன், சரோஜாதேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு முதல் தயாரிப்பில் இருந்து இரண்டு வருடம் கழித்து 1959 ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம் கதாநாயகி அந்தஸ்தை சரோஜாதேவிக்கு வழங்கியது. இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.

1961 ஆம் ஆண்டில் தனது சொந்தப் பட நிறுவனம் சித்ராலயாவைத் தொடங்கிய ஸ்ரீதர் 30 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தினார். இவர் கடைசியாக இயக்கிய படம் "தந்துவிட்டேன் என்னை".

இயக்கி தயாரித்த தமிழ் திரைப்படங்கள்[தொகு]

இயக்கிய திரைப்படங்கள்

தயாரிப்பு மற்றும் கதை வசனம் எழுதிய திரைபடங்கள் :-

மறைவு[தொகு]

சில ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஸ்ரீதர், திரைப்படப் இயக்குனர் பணியிலிருந்து முழுவதுமாக 1991 ஆம் ஆண்டிலிருந்து தன்னை விடுவித்து கொண்டார். 2008, அக்டோபர் 20 இல் சென்னையில் தனது 75 ஆவது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதர்_(இயக்குநர்)&oldid=3954334" இலிருந்து மீள்விக்கப்பட்டது