உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் கவுச் ஆடம்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் கவுச் ஆடம்சு
John Couch Adams
1870 இல் ஜான் ஆடம்சு
பிறப்பு(1819-06-05)5 சூன் 1819
லானீஸ்டு, லான்செஸ்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு21 சனவரி 1892(1892-01-21) (அகவை 72)
கேம்பிரிட்ச் வான்காட்சியகம்
கேம்பிரிட்ச்சயர், இங்கிலாந்து
தேசியம்பிரித்தானியர்
துறைகணிதம்
வானியல்
பணியிடங்கள்புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்
கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
Academic advisorsஜான் ஐமர்சு
விருதுகள்சிமித் பரிசு (1843)
கோப்லி விருது (1848)
ராயல் வனியல் கழக தங்கப் பதக்கம் (1866)

ஜான் கவுச் ஆடம்சு (John Couch Adams, 5 சூன் 1819 – 21 சனவரி 1892) என்பவர் பிரித்தானிய கணிதவியலாளரும், வானியலாளரும் ஆவார்.

ஜான் ஆடம்சு இங்கிலாந்தின் இலான்செசுட்டன் நகரில் ஒரு குத்தகை உழவருக்கு மகனாகப் பிறந்தார்.[1] கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் 1843இல் கணிதத்தில் பட்டம் பெற்றார்.[2] 1859 முதல் இறக்கும் வரை அதே பல்கலைக்கழகத்தில் இலவுண்டீன் கட்டிலில் வானியல், வடிவியலில் இலவுண்டீன் பேராசிரியராகப் பணியாற்றினார். 1860இல் கேம்பிரிட்ச் வான்காணகத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார்.

இவர் 1846இல் இலவாய்ரியருக்கும் முன்பாகவே நெப்டியூன் என்ற கோளின் இருப்பைக் கண்டறிந்தார். இவரது கணக்கீடுகள், இலவாய்ரியரின் முன்கணிப்பு வெளியாகும்வரை, கண்டுகொள்ளப்படவில்லை.[3] ஆடம்சின் முன்கணிப்பின் முன்மையைப் பிறகு ஜேம்சு சால்லீசும், ஜான் ஹெர்சலும் சுட்டிக் காட்டினர்.

இவர் 1852இல் நிலாவின் நிரலியக்க வேறுபாடுகளையும், 1866இல் கோள்களின் சிற்றலைவுகளையும் ஆய்வு செய்தார். இவை இரண்டுமே வான்கணிதவியற் சிக்கல்களாகும். இவரது வானியல் கட்டுரைகள் இருதொகுதிகளாக 1876இலும் 1901இலும் வெளியிடப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1.   "Adams, John Couch". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. 
  2. "Adams, John Couch (ADMS839JC)". A Cambridge Alumni Database. University of Cambridge. 
  3. Sheehan et al. (2004)

வெளி இணைப்புகள்[தொகு]

  • Wikisource logo ஜான் கவுச் ஆடம்சு எழுதிய அல்லது இவரைப்பற்றிய ஆக்கங்கள் விக்கிமூலத்தில்:
  • Biography on the St Andrews database
  • Weisstein, Eric Wolfgang (ed.). "Adams, John Couch (1819–1892)". ScienceWorld.
  • O'Connor, John J.; Robertson, Edmund F., "ஜான் கவுச் ஆடம்சு", MacTutor History of Mathematics archive, புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகம்.
  •   "Adams, John Couch". New International Encyclopedia. (1905). 
  •  "Adams, John Couch". Encyclopedia Americana. 1920. 
  • ஜான் கவுச் ஆடம்சு at Find a Grave
  • Davor Krajnovic, John Couch Adams: mathematical astronomer, college friend of George Gabriel Stokes and promotor of women in astronomy
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_கவுச்_ஆடம்சு&oldid=4031695" இலிருந்து மீள்விக்கப்பட்டது