உள்ளடக்கத்துக்குச் செல்

டானியல் கொட்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டானியல் கொட்கே
டானியல் கொட்கே, ஜனவரி 2007
பிறப்புஏப்ரல் 4, 1954 (1954-04-04) (அகவை 70)
புரோன்ஸ்வில்லி, நிவ் யார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிபொறியியளாளர், கண்டுபிடிப்பாளர்

டானியல் கொட்கே ஒரு கணனிப் பொறியளாளர் மற்றும் அப்பிள் நிறுவனத்தின் ஆரம்ப பணியாளர்களிள் ஒருவராகும்.

அப்பிள்

[தொகு]

டானியல் கொட்கே அவர்கள் 1976இல் ஸ்டீவ் ஜொப்ஸ் மற்றும் ஸ்டீவ் வொஸ்னியக் ஆகியோர் ஸ்டீவ் ஜொப்ஸின் வீட்டு வாகனத் தரிப்பிடத்தில் அப்பிள் I கணனியைத் தயாரித்தபோது அந்தக் குழுவில் பங்குபற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பிள் நிறுவனத்தைத் தயாரிக்க முன்னரே டானியல் கொட்கே மற்றும் ஸ்டீவ் ஜொப்ஸ் ஆகியோர் ரீட் கல்லூரியில் நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் ஆண்மீக அறிவொளியைத் தேடி அமெரிக்காவில் இருந்து இந்தியா சென்று திரும்புமளவிற்கு நண்பர்களாக இருந்தனர்[1]. அப்பிள் I, அப்பிள் II, மக்கின்டோஸ் போன்ற செயற்றிட்டங்களில் டானியல் கொட்கே பணியாற்றியதுடன் மக்கின்டோசின் ஆரம்ப வெளியீடுகளின் உட்புறத்தில் டானியல் கொட்கேயின் கையெழுத்தைக் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

ஆயினும் அப்பிள் நிறுவனம் பங்குச்சந்தையில் இடம்பெற்ற போது டானியல் கொட்கேயிற்கு பங்குகள் எதனையும் வழங்க ஸ்டீவ் ஜொப்ஸ் மறுப்புத் தெரிவித்தார். டானியல் கொட்கேயிற்கு பூச்சியம் பங்குகளையே வழங்க முடியும் என்று கூறியதாக வோல்ட்டர் ஐசாக்சன் எழுதிய ஸ்டீவ் ஜொப்சின் சுயசரிதையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. "India visit gave a vision to Steve Jobs Read more at: http://indiatoday.intoday.in/story/india-visit-gave-a-vision-to-steve-jobs/1/154785.html". பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2014. {{cite web}}: External link in |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டானியல்_கொட்கே&oldid=3214444" இலிருந்து மீள்விக்கப்பட்டது