பீனாலேட்டுகள்
பீனாலேட்டுகள் (Phenolates) என்பவை பீனாலேட்டு அயனியைக் கொண்டிருக்கும் பீனால்களின் எதிர்மின் அயனிகள், உப்புகள் மற்றும் எசுத்தர்கள் ஆகியவற்றைக் குறிக்கும். இவற்றை பீனாக்சைடுகள் என்ற பெயராலும் அழைக்கலாம். பீனால்கள் வலிமையான காரத்துடன் வினைபுரிந்து பீனாலேட்டுகள் உருவாகின்றன.
பண்புகள்
[தொகு]சோடியம் பீனாலேட்டு போன்ற கார உலோக பீனாலேட்டுகள் நீரிய கரைசலில் நீராற்பகுப்படைந்து காரக் கரைசல்களை உருவாக்குகின்றன.[1] காரகாடித்தன்மைச் சுட்டெண் (pH) 10 ஆக இருக்கும் கரைசல்களில் பீனால் மற்றும் பீனாலேட்டு விகிதம் தோராயமாக 1:1 என்ற விகிதத்தில் இருக்கும். பீனாக்சைடு அயனி அதாவது பீனாலேட்டு என்பது கார்பன் எதிர்மின் அயனிகள் அல்லது மூவிணைய அமீன்களுடன் ஒப்பிடக்கூடிய ஒரு வலுவான அணுக்கருகவரியாகும்.[2] பொதுவாக, பீனாக்சைடு அயனிகளின் ஆக்சிசன் தாக்குதல் இயக்க ரீதியாக சாதகமானதாகும். அதேசமயத்தில் கார்பன்-தாக்குதல் வெப்ப இயக்கவியல் ரீதியாக விரும்பப்படுகிறது. ஒருவேளை வினை வீதம் பரவல் கட்டுப்பாட்டை அடைந்தால், கலப்பு ஆக்சிசன்/கார்பன் தாக்குதலும் தேர்ந்தெடுக்கும் திறன் இழப்பும் பொதுவாகக் காணப்படுகிறது.[3]
பயன்
[தொகு]சோடியம் பீனாலேட்டை ஆல்க்கைல் ஆலைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் ஆல்க்கைல் அரைல் ஈதர்களை தயாரிக்க இயலும். இவ்வினை வில்லியாம்சன் ஈதர் தொகுப்பு வினை என்று அழைக்கப்படுகிறது:[4]
- C6H5ONa + CH3I → C6H5OCH3 + NaI
- C6H5ONa + (CH3O)2SO2 → C6H5OCH3 + (CH3O)SO3Na
சாலிசிலிக் அமிலம் தயாரிப்பு
[தொகு]கார்பன் டை ஆக்சைடு வாயுவுடன் சோடியம் பீனாலேட்டைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் கோல்பு-சிமிட்டு வினை நிகழ்ந்து சாலிசிலிக் அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jakubke, Hans-Dieter; Karcher, Ruth (1999). Lexikon der Chemie in drei Bänden, Band 3. Heidelberg: Spektrum Verlag. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-8274-0381-2.
- ↑ [1]. Mayr’s Database of Reactivity Parameters. Retrieved July 10, 2019.
- ↑ Mayer, Robert J.; Breugst, Martin; Hampel, Nathalie; Ofial, Armin R.; Mayr, Herbert (2019-06-26). "Ambident Reactivity of Phenolate Anions Revisited: A Quantitative Approach to Phenolate Reactivities". Journal of Organic Chemistry 84 (14): 8837–8858. doi:10.1021/acs.joc.9b01485. பப்மெட்:31241938.
- ↑ Beyer, Hans; Walter, Wolfgang (1984). Organische Chemie. Stuttgart: S. Hirzel Verlag. pp. 463–464. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-7776-0406-2.