சூலை 13: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
சி →வெளி இணைப்புக்கள்: re-categorisation per CFD using AWB |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
{{நாட்கள்}} |
{{நாட்கள்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:சூலை]] |
||
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] |
11:02, 2 சூலை 2017 இல் நிலவும் திருத்தம்
<< | சூலை 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சூலை 13 (July 13) கிரிகோரியன் ஆண்டின் 194 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 195 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 171 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1174 - இசுக்காட்லாந்தின் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் இரண்டாம் என்றியின் படையினரால் கைப்பற்றப்பட்டான்.
- 1643 - இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1793 - பிரெஞ்சு எழுத்தாளரும் புரட்சிவாதியுமான ஜான் போல் மராட் அவரது குளியல் அறையில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
- 1844 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
- 1869 - இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் ஓர் ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.
- 1908 - லண்டனில் இடம்பெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாகப் பெண்கள் பங்குபற்றினர்.
- 1878 - பெர்லின் உடன்படிக்கை: சேர்பியா, மொண்டெனேகுரோ, ருமேனியா ஆகிய நாடுகள் ஒட்டோமான் பேரரசில் இருந்து முழுவதுமாக விடுதலை பெற்றன.
- 1923 - லாஸ் ஏஞ்சலீசில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் "ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949 இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.
- 1930 - முதலாவது உலகக் கோப்பை காற்பந்தாட்டப் போட்டிகள் உருகுவாயில் ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காக மெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.
- 1931 - காஷ்மீர், ஸ்ரீநகரில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.
- 1971 - மொரோக்கோவில் தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.
- 1977 - மின்சார இழப்பினால் நியூ யோர்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.
- 1989 - இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் அ. அமிர்தலிங்கம், மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1997 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
- 2001 - சீனாவின் பெய்ஜிங் நகரம் 2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.
- 2005 - பாகிஸ்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள் மோதியதில் 150 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1590 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1676)
- 1841 – ஓட்டோ வாக்னர், ஆத்திரிய கட்டிடக் கலைஞர் (இ. 1918)
- 1854 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1934)
- 1934 – வோலே சொயிங்கா, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர்
- 1938 – தோமசு சவுந்தரநாயகம், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்
- 1940 – பேட்ரிக் ஸ்டீவர்ட், ஆங்கிலேய நடிகர், இயக்குநர்
- 1942 – ஹாரிசன் போர்ட், அமெரிக்க நடிகர்
- 1944 – ஏர்னோ ரூபிக், அங்கேரிய கட்டிடக் கலைஞர், ரூபிக் கனசதுரத்தைக் கண்டுபிடித்தவர்.
- 1951 – லெ. முருகபூபதி, இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்
- 1953 – வைரமுத்து, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.
- 1983 – லியு சியாங், சீன ஓட்டவீரர்
இறப்புகள்
- 574 – மூன்றாம் யோவான் (திருத்தந்தை)
- 939 – ஏழாம் லியோ (திருத்தந்தை)
- 1921 – காபிரியேல் லிப்மன், நோபல் பரிசு லக்சம்பர்க் இயற்பியலாளர் (பி. 1845)
- 1954 – ஃபிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர் (பி. 1907)
- 1989 – அ. அமிர்தலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் (பி. 1927)
- 2013 – ஒத்தோவியோ குவாத்ரோச்சி, இத்தாலியத் தொழிலதிபர் (பி. 1938)
- 2014 – நாடின் கார்டிமர், நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)